Romeo Juliet

Romeo Juliet
பேராசிரியர் ஹிக்கின்ஸ் உச்சரிப்புக் கலையில் கை தேர்ந்த நிபுணராக இருந்தார். அவரிடம் கர்னல் பிக்கெரிங் ஒரு முறை, சவால் ஒன்றை விடுத்தார். கவென்ட் தோட்டத்தைச் சேர்ந்த பூ விற்பனை செய்யும் 'எலிஸா டூலிட்டில்' என்ற இளம் பெண்ணான மேட்டுக்குடியைச் சேர்ந்தவளைப் போல ஆறே மாதத்தில் பேராசிரியர் ஹிக்கின்ஸ் பேச வைக்க வேண்டும். இதுதான் அந்தச் சவால்.

கர்னல் பிக்கெரிங்கின் சவாலை ஏற்றுக் கொண்ட பேராசிரியர் ஹிக்கின்ஸ் லண்டன் மாநகர கீழ்த்தர மக்களுக்கே உரித்தான உச்சரிப்பைப் பெற்றிருந்த எலிஸா டூலிட்டிலை ஒரு சீமாட்டியாக
மாற்றுவதற்கு மேட்டுக் குடிசையினரின் பேச்சு, மற்றும் நடை, உடை, பாவனைகள் அவர்களுக்கென்றே பிரத்தியேகமானவை. பிரம்மப் பிரயத்தனம் செய்து, பேச்சு மற்றும் பழக்க வழக்கங்களில் எலிஸாவை நன்கு பயன்படுத்திய பேராசிரியர் பிக்கின்ஸ். தனது அந்த முயற்சிகள் எந்த அளவுக்கு வெற்றி அடைந்திருக்கின்றன என்று கண்டறிய விரும்பினார். அவருடைய தாய் விருந்தினர்களை வரவேற்று உபசரிக்கும் 'விருந்தினர் தினத்தின்' போது எலிஸாவை அவருடைய இல்லத்துக்கு அழைத்துச் செல்ல ஹிக்கின்ஸ் திட்டமிட்டார்.

இதையறிந்த அவருடைய தாயார் திடுக்கிட்டார். விருந்துக்கு வரும் 'மேல்தட்டு' மக்களை எலிஸா தர்மசங்கடத்தில் ஆழ்த்தி விடுவாளோ என்று அவர் அஞ்சினார். ஆகவே ஹிக்கின்ஸின் இந்த திட்டத்துக்கு ஒப்புக்கொள்ள முதலில் அவர் மறுத்தார். ஆயினும் ஹிக்கின்ஸ் பல முறை வற்புறுத்திய பிறகு அவருடைய தாய் இந்தத் திட்டத்துக்கு இணங்கினார். முதலில் இது போன்ற விருந்து ஒன்றுக்கு எலிஸாவை அழைத்துச் சென்றால்தான். பின்னர் அவளை லண்டன் தூதரகத்தில் துாதரக அதிகாரி தருகின்ற வரவேற்பு போன்ற மிகப் பெரிய நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்ல முடியும் என்று பேராசிரியர் ஹிக்கின்ஸ் தன் அன்னையிடம் எடுத்துச் சொன்னார். வேலைக்காரி அப்போது ஓபன்ஸ் போர்டு- ஹில் குடும்பத்தினர், கானல் பிக்கெரிங் மற்றும் குமாரி எலிஸா டூலிட்டில் ஆகியோரின் வருகையை அறிவித்தாள். விருந்தினர்களை பேராசிரியர் ஹிக்கின்ஸின் மனைவி வரவேற்றார். விருந்தளிப்பவரான தனது அன்னையிடம் எலிஸாவை, ஹிக்கின்ஸ் அறிமுகம் செய்தார். எலிஸா 'மேல்நாட்டு மக்களைப் போலவே பேச முடிந்தது மட்டுமின்றி, அவளுடைய உச்சரிப்பும் சரியாக இருந்ததைக் கண்டு ஹிக்கின்ஸின் தாய் நிம்மதி அடைந்தாள். விஷயம் அறிந்த அறிவாளியைப் போல அன்றைய தினத்தின் கால நிலையைப் பற்றியெல்லாம் எலிஸா விவரித்ததைக் கண்டு ஹிக்கின்ஸின் தாயார் மிகவும் ஆச்சரியப்பட்டார்.

விருந்தினர்களின் உரையாடல் பின்பு நுரையீரல் நோயான 'குளிர் கப காய்ச்சல்' பற்றி திரும்பியது. தனது அத்தை அந்த நோயினால் இறந்து விட்டதாக ஹிக்கின்ஸின் மனைவியிடம் எலினா கூறினாள். அப்போது திடீரென்று உணர்ச்சி வசப்பட்ட எலிஸா. தான் பேச வேண்டிய முறையை முற்றிலும் மறந்தாள், பூக்காரியைப் போன்று பழையபடி பேசத் துவங்கிய அவள், தன்னுடைய அத்தை கொலை செய்யப்பட்டதாகக் கூறினாள்.

முற்றிலும் எதிர்பாராத விதத்தில், அவளுடைய அந்த கொச்சையான பேச்சைக் கேட்ட விருந்தினர்கள் திடுக்கிட்டனர். அப்போது பேராசிரியரின் மனைவி குறுக்கிட்டு எலிஸாவை அங்கிருந்து வெளியேறும்படி சைகை செய்தாள். விருந்தினர்கள் குழப்பம் அடைந்தனர். எலிஸாவின் உச்சரிப்பை மதித்து புகழ்ந்த அவர்கள், அதே நேரத்தில் ஆங்கில மொழியைப் பற்றிய அறிவு அவெளிடம் இல்லாதது குறித்து அதிருப்தி அடைந்தனர். எதிபாராத திசையில் உரையாடல் திரும்பிய போது, எலிஸாவினால் அதை சமாளிக்க முடியவில்லை என்ற உண்மை அப்போது புலப்பட்டது.

ஆயினும், பேராசிரியர் பிக்கின்ஸின் செயலை அவருடைய தாயார் மெச்சினார். அது மட்டுமின்றி, தான் 'மேல்தட்டு வர்க்கத்தைச்' சேர்ந்தவளென்று எலிஸா மற்றவர்களை நம்ப வைக்க வேண்டுமென்றால், ஆங்கில மொழியில் தனது செயலாற்றலை அவள் மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் ஹிக்கின்ஸின் தாயார் கருத்துத் தெரிவித்தார்.

ஆறு மாதங்கள் முடிவுற்றன. லண்டன் மாநகரின் செல்வச் செழிப்பு மிக்க சீமான், சீமாட்டிகளுடன் எலிஸாவைப் பழக வைக்க ஹிக்கின்ஸ் தயாராக இருந்தார். கர்னல் பிக்கெரிங் எலிஸாவை தன்னுடன் அழைத்துச் சென்றார். துாதரகத்தின் வரவேற்பு மண்டபத்தில் அவர்கள் நுழைந்தனர். ஹங்கேரிய நாட்டைச் சேர்ந்த நிப்பம்மக் என்பவர் அவர்களைப் பார்த்து வணக்கம் செலுத்தினார். பேராசிரியரின் பழைய மாணவரென்று நிப்பம்மக் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

எலிஸாவின் அபார அழகு, விருந்தினர் கண்ணைக் கவர்ந்தது. மிக நேர்த்தியான தனது பழகும் விதத்தினாலும், அழகான அடுக்கு மொழிச் சொற்களாலும் எலிஸா அவர்களைக் கவர்ந்தாள். தூதரக அதிகாரியின் மனைவி எலிஸா கர்னல் பிக்கெரிங் வளர்ப்பு மகளா என்று நிப்பம்மக்கிடம் கருத்துக் கேட்டார். அப்போது நிப்பம்மக், எலிஸா ஒரு ஏமாற்றுக்காரி என்று குறி போட்டார். எலிஸா, ஹங்கேரிய நாட்டைப் சேர்ந்தவளென்று நிப்பம்மக் சொன்னார். நிப்பம்மக்கிடம் எலிஸா ஹங்கேரிய மொழியில் பேசினாளா என்று அவளிடம் பேராசிரியர் ஹிக்கின்ஸ் கேட்டார். அப்போது குறுக்கிட்ட நிப்பம்மக், எலிஸா அவளுடைய தாய் மொழியையே அறியாதவளைப் போல் மிகவும் சாமார்த்தியமாக நடித்ததாகச் சொன்னார். அவள் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளவரசியே என்ற உண்மையை தான் கண்டுபிடித்து விட்டதாகவும் நிப்பம்மக் மேலும் குறிப்பிட்டார்.

அப்போது பேராசிரியர் ஹிக்கின்ஸ், எலிஸா பூ விற்பனை செய்யும் ஒரு சாதாரணப் பெண்மணி என்ற உண்மையையும், ஆனால் மேல்நாட்டு வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு சீமாட்டியைப் போல பேசவும், பழகவும் திறமை வாய்ந்த ஒருவரால் அவளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது என்பதையும் வெளிப்படுத்தினார். நிப்பம்மக் அதை நம்புவதற்கு மறுத்தார். தூதரக அதிகாரியும், அவரது மனைவியும் எலிஸா ஒரு இளவரசியே என்ற நிப்பம்மக்கின் கருத்தை ஏற்றுக் கொண்டனர். கானல் பிக்கெரிங் எலிஸா போட்டியில் வென்று விட்டதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார். அனைவரும் அங்கிருந்து திருப்தியுடன் புறப்பட்டனர். எலிஸா பிரடெரிக் ஜன்ஸ்போர்டு ஹில் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாள். எலிஸா அறியாமையிலிருந்து அழகை நோக்கிச் சென்றதை ஜார்ஜ் பெர்னார்டு ஷா அற்புதமாக படம் பிடித்துக் காட்டுகிறார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

MMK 7'S Cheetahs கபாடி குழுவினரால் நடத்தப்படும் நான்காம் ஆண்டு கபாடி போட்டி