இடுகைகள்

நவம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

tha winter

குளிர்காலக்கதை (The Winter's Tale) கதைச்சுருக்கம் சிஸிலி தேசத்தை லியாண்டஸ் என்னும் அரசன் ஆட்சி செய்து வந்தான். அவனுடைய இராணியின் பெயர் அவள் ஒப்பற்ற அழகி. அவளது அழகிலே மிகவும் ஈடுபட்டிருந்தான் அரசன். அவளது மோகனப் புன்னகையிலே மயங்கியிருந்தான். லியாண்டஸ் மன்னனுக்கு ஒரு நண்பன் இருந்தான். அவன் பொஹிமியா தேசத்து அரசன், அவன் பெயர் போலிக்கன். அவ்விருவரும் சிறு வயதிலே ஒன்றாயிருந்தனர். பிறகு அவரவர் நாட்டுக்குப் போய் அரசாளத் தொடங்கினர். இருவரும் அடிக்கடி கடிதம் எழுதிக் கொள்வார்கள். சந்திக்க முடிவதில்லை. அவர்கள் இருவரும் நேரில் சிஸிலி மன்னன் மாத்திரம் தனது நண்பனாகிய பொஹிமியா அரசனை அடிக்கடி அழைப்பது வழக்கம் அப்படி அழைத்தாலும் ஒரு முறை கூட வர முடியாது போயிற்று பொஹிமியா அரசனுக்கு. கடைசியாக ஒரு முறை வந்தான். தன் இளமை காலத்துச் சிநேகிதன் வந்தானே என்று மிகவும் மகிழ்ந்தான் சிஸிலி அரசன். தன் இராணிக்கு அறிமுகம் செய்து வைத்தான். அவர்களது மகிழ்ச்சியில் இராணி ஹெர்மியானும் கலந்து கொண்டாள். இப்படியாகப் பல தினங்கள் சென்றன. பொஹிமியா மன்னன் தன் நாட்டுக்குச் செல்ல விரும்பினான். இன்னும் சில நாட்கள் இருந்து விட்டு...

Romeo Juliet

Romeo Juliet பேராசிரியர் ஹிக்கின்ஸ் உச்சரிப்புக் கலையில் கை தேர்ந்த நிபுணராக இருந்தார். அவரிடம் கர்னல் பிக்கெரிங் ஒரு முறை, சவால் ஒன்றை விடுத்தார். கவென்ட் தோட்டத்தைச் சேர்ந்த பூ விற்பனை செய்யும் 'எலிஸா டூலிட்டில்' என்ற இளம் பெண்ணான மேட்டுக்குடியைச் சேர்ந்தவளைப் போல ஆறே மாதத்தில் பேராசிரியர் ஹிக்கின்ஸ் பேச வைக்க வேண்டும். இதுதான் அந்தச் சவால். கர்னல் பிக்கெரிங்கின் சவாலை ஏற்றுக் கொண்ட பேராசிரியர் ஹிக்கின்ஸ் லண்டன் மாநகர கீழ்த்தர மக்களுக்கே உரித்தான உச்சரிப்பைப் பெற்றிருந்த எலிஸா டூலிட்டிலை ஒரு சீமாட்டியாக மாற்றுவதற்கு மேட்டுக் குடிசையினரின் பேச்சு, மற்றும் நடை, உடை, பாவனைகள் அவர்களுக்கென்றே பிரத்தியேகமானவை. பிரம்மப் பிரயத்தனம் செய்து, பேச்சு மற்றும் பழக்க வழக்கங்களில் எலிஸாவை நன்கு பயன்படுத்திய பேராசிரியர் பிக்கின்ஸ். தனது அந்த முயற்சிகள் எந்த அளவுக்கு வெற்றி அடைந்திருக்கின்றன என்று கண்டறிய விரும்பினார். அவருடைய தாய் விருந்தினர்களை வரவேற்று உபசரிக்கும் 'விருந்தினர் தினத்தின்' போது எலிஸாவை அவருடைய இல்லத்துக்கு அழைத்துச் செல்ல ஹிக்கின்ஸ் திட்டமிட்டார். இதையறிந்த அவருடைய த...