tha winter
குளிர்காலக்கதை (The Winter's Tale)
கதைச்சுருக்கம்
சிஸிலி தேசத்தை லியாண்டஸ் என்னும் அரசன் ஆட்சி செய்து வந்தான். அவனுடைய இராணியின் பெயர் அவள் ஒப்பற்ற அழகி. அவளது அழகிலே மிகவும் ஈடுபட்டிருந்தான் அரசன். அவளது மோகனப் புன்னகையிலே மயங்கியிருந்தான். லியாண்டஸ் மன்னனுக்கு ஒரு நண்பன் இருந்தான். அவன்
பொஹிமியா தேசத்து அரசன், அவன் பெயர் போலிக்கன். அவ்விருவரும் சிறு வயதிலே ஒன்றாயிருந்தனர். பிறகு அவரவர் நாட்டுக்குப் போய் அரசாளத் தொடங்கினர். இருவரும் அடிக்கடி கடிதம் எழுதிக் கொள்வார்கள். சந்திக்க முடிவதில்லை. அவர்கள் இருவரும் நேரில் சிஸிலி மன்னன் மாத்திரம் தனது நண்பனாகிய பொஹிமியா அரசனை அடிக்கடி அழைப்பது வழக்கம் அப்படி அழைத்தாலும் ஒரு முறை கூட வர முடியாது போயிற்று பொஹிமியா அரசனுக்கு. கடைசியாக ஒரு முறை வந்தான். தன் இளமை காலத்துச் சிநேகிதன் வந்தானே என்று மிகவும் மகிழ்ந்தான் சிஸிலி அரசன். தன் இராணிக்கு அறிமுகம் செய்து வைத்தான். அவர்களது மகிழ்ச்சியில் இராணி ஹெர்மியானும் கலந்து கொண்டாள்.
இப்படியாகப் பல தினங்கள் சென்றன. பொஹிமியா மன்னன் தன் நாட்டுக்குச் செல்ல விரும்பினான். இன்னும் சில நாட்கள் இருந்து விட்டுப் போகலாம் என்று லியாண்டஸ் கூறினான். அவனது வேண்டுகோளின்படி பொஹமியா அரசன் தங்கி விட்டான், அரசன் லியாண்டசுக்கு தன் இராணி மீது சந்தேகம். அவளுக்கும், தன்நண்பனுக்கும் தொடர்பு என்று முடிவு செய்தான். அவனுக்கு ஆத்திரம் பொங்கியது. நிதானம் இழந்தான். பகுத்தறிவு இழந்தான். தன் அரச சபையிலே இருந்த பிரபுக்களிலே முக்கியமான ஒருவனை அழைத்தான். அவன் பெயர் காமிலோ.
தன் உள்ளத்து வேதனைகளையெல்லாம் அவனிடம் கூறினான். அரசன், போலிக்கனைக் கொன்று விடும்படி கூறினான். காமிலோ மிகவும் நல்லவன். நிதானமாக எதையும் யோசித்துப் பார்க்கும் குணமுடையவன். லியாண்டஸ் புத்தி தடுமாறி விட்டான் என்று அறிந்தான் காமிலோ. எனவே, விருந்துக்கு வந்த மன்னனைக் கொல்வது கூடாது என்று எண்ணினான். காமிலோ தனக்கு
திட்ட கட்டளையை பொஹிமியா அரசனிடம் தெரிவித்தான். அவனுனைப் பத்திரமாக அழைத்துக் கொண்டு அந்த நாட்டை வீட்டு வெறியேற்றினான்.
காழிலோ, பொஹீமியா அரசனுடன் ஓடி விட்ட செய்தி அறிந்தான் லியாண்டஸ். முன்னிலும் பன் மடங்கு கோபம் தொண்டான். ஹெர்மினா இராணியின் அந்தப்புரத்திற்கு ஓடினான். அந்தப்புரத்திலே ஹெர்மியான் இராணி மகனுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அந்தச் சிறுவனை அப்பால் எடுத்துக் கொண்டு போகும்படி கட்டளையிட்டான் அரசன். இராணியைச் சிறைக்கு அனுப்பினான். தன் தாயை நினைத்து நினைத்து ஏங்கிய அச்சிறுவன் சில நாட்களிலே இறந்து விட்டான்.
சிறையிலே இருந்த ஹெர்மியான் இராணிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் முகம் கண்டு களிப்புற்றாள் இராணி. தன் துயரத்தை மறந்தாள். அந்த நாட்டிலே ஒரு பிரபு இருந்தார். அவரது பெயர் அன்டிகோனஸ், அவர் மனைவியின் பெயர் பாலினா. இவ்விருவரும் இராணி ஹெர்மியானிடம் பேரன்பு கொண்ட நண்பர்கள் குழந்தையைக் கொடுத்தனுப்பும்படி பாலினா கூறினாள். இராணியும் குழந்தையைக் கொடுத்தனுப்பினாள். குழந்தையைக் கொண்டு போனாள் பாலினா. அரசனின் காலடியில் கிடத்தினாள். இராணி ஹெர்மியான் மீது அரசன் கொண்டுள்ள எண்ணம் தவறானது என்பதை எடுத்துக் கூறினாள். ஆனால் அரசன் ஒரே பிடிவாதமாக இருந்தான். உடனே அரசன் அன்டிகோனஸை அழைத்தான். அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு போய் கடலுக்கு அப்பால் எங்கேயாவது எறிந்து விட்டு வருமாறு உத்தரவிட்டான். உத்தரவுப்படியே குழந்தையுடன் புறப்பட்டான் அன்டிகோனஸ், கப்பலில் ஏற்றிச் சென்றான் கப்பல் பொஹிமியாவின் கரையோரம் போய் நின்றது. கப்பலை விட்டு
இறங்கினான். அந்தக் குழந்தையின் பெயர் பொடிட்டா என்று ஒரு காகிதத்தில் எழுதி, பிறப்பு மற்றும் கொண்டு வந்து விடப்பட்ட காரணத்தையும் சுருக்கமாகக் குறித்தான், அக்குறிப்பை அந்தக் குழந்தையின் அருகே வைத்தான். மீண்டும் கப்பலுக்குத் திரும்பினான். திரும்பி வரும் வழியில் கரடி ஒன்று அவனைக் கொன்று விட்டது. அரசன் ஹெர்மியான் இராணியைக் கொண்டு வரும்படி கட்டளையிட்டான். நீதிமன்றத்திலே பலர் முன்னிலையிலே அவளை விசாரிக்கத் தொடங்கினான். தன் அருமைக் குழந்தையின் கறியைக் கேட்ட ஹெர்மியான் இராணி மூர்ச்சித்து விழுந்தாள். அவளைத் தூக்கிக் கொண்டு போகுமாறு கட்டளையிட்டான் லியாண்டஸ். சிறிது நேரம் கழித்து அரசி இறந்து விட்டதாகக் கூறினார்கள். அது கேட்டு மிக வருந்தினான் அரசான். கடலுக்கு அப்பால் கொண்டு போய் விட்டு விடுமாறு சொன்ன குழந்தையைத் தேட முயன்றான்.
எவருமில்லாமல் அண்தையாகக் கிடந்த அந்தக் குழந்தையைக் கண்டான் ஓர் ஆட்டிடையன். அக்குழந்தையின் மீது அணிந்திருந்த விலையுயர்ந்த நகைககையும், உடைகளையும் கண்டான். அதன் அருகிலேயே இருந்த காகிதத்தையும் கண்டான். குழந்தையை தன் குழந்தை போல் ஆசையுடன் வளர்த்து வந்தான். ஆண்டுகள் பல சென்றன. பொடிட்டா என்ற அந்தப் பெண்ணும் பருவமடைந்தாள். மங்கையானாள். அரச குலத்தில் பிறந்த பெண் என்பதால் அவள் மிகவும் அழகாகத் திகழ்ந்தாள். குணத்திலும் சிறந்து விளங்கினாள். பொஹிமியா தேசத்து அரசனுக்கு ஒரே ஒரு மகன். அவன் பெயர் பிளாரிசல். ஒரு நாள் வேட்டைக்குச் சென்று கொண்டிருந்த போது பெர்டிட்டாவைக் கண்ட அவன், காதல் கொண்டான். தன் பெயர் டோரிக்ளிஸ் என்று கூறினாள். தனது தந்தையிடமும் தான் பொடிட்டாவைக் காதலிப்பதாகக் கூறினான். காமில்லாவுக்கு மனம் இளகியது.
இந்தக் காதல் ஜோடிக்கு எவ்விதமான துன்பமும் ஏற்படாமல் காக்க வேண்டும் என்று விரும்பினான். எனவே பொடிட்டா. பிளாரிசல் மற்றும் ஆட்டிடையன் ஆகிய மூவரையும் அழைத்துக் கொண்டு சிஸிலிக்குப் போகத் திட்டமிட்டான். சிஸிலி அரசனாகிய லியாண்டஸ் மூலமாக பிளாரிசல் பொடிட்டாவின் திருமணத்திற்கு பொஹிமியா அரசனின் அனுமதியைப் பெற்று விடலாம் என்று அவன் கூறிய யோசனைக்கு எல்லோரும் இணங்கினர். சிஸிலிக்குப் புறப்பட்டுச் சென்றான்.
சிஸிலியிலே லியாண்டஸ் அரசன் தன் பழைய நண்பன் காமிலோ வரவே, அவனை மகிழ்ச்சியுடன் வரவேற்றான். பொடிட்டாவைப் பார்த்தார். அவன் உள்ளத்தில் ஒரு விதமான உணர்ச்சி ஏற்பட்டது. தன் மகள் உயிருடன் இருந்தால் இப்படித்தான் இருப்பாள் என்று கூறினான். அதைக் கேட்டதும் ஆட்டிடையன் பொடிட்டாவைத் தான் கண்டெடுத்த கதையை அரசனிடம் விவரமாகக் கூறினான். காகிதக் குறிப்பு, அவள் அணிந்திருந்த ஆடைகள் ஆகியவற்றை அரசரிடம் கொடுத்தான். அரசன் அருகில் நின்று கொண்டிருந்த அன்டிகோனஸ் மனைவி பாலினா அவற்றை வாங்கிப் பார்த்தாள். இது தன் கணவர் அன்டிகோனஸ் கையெழுத்துதான். அந்த உடைகளைத்தான் அந்தக் குழந்தைக்கு தான் அணிவித்ததாகவும் அவள் கூறினாள்.
லியாண்டஸ் அரசன் மகிழ்ச்சியடைந்தான். காணாமல் போன தன் குழந்தையைக் கண்டுபிடித்ததில் மகிழ்ச்சி. அதே சமயத்தில் அவள் தாயை எண்ணி வருத்தமடைந்தான். அரசியைப் போலவே ஒரு சிலை செய்து வைத்திருப்பதாகவும், அவருடைய உயிருள்ள உருவம் மாதிரியே இருக்கிறது என்றும் பாலினா கூறினாள். ஒரு பட்டுத் திரையை விலக்கியவுடன் மங்கலான வெளிச்சத்தில் அந்தச் சிலையைப் பார்த்தான் அரசன். ஹெர்மினா மாதிரியே இருப்பதாகக் கூறி வியந்தான். அந்தச் சிலை உடனே எழுந்து வந்து அவனைக்
கட்டிக் கொண்டது. இது சிலையல்ல என்றும் ஹெர்மியான்தான் என்று அரசன் கூறினான். இராணி இறந்து விட்டாள் என்று சொன்னது பொய் என்றாள் பாலினா. ஹெர்மியான் இராணி இறக்கவில்லை என்று அறிந்த அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். தனது குமாரன் காதலித்த பெண் லியாண்டஸ் அரசனின் குமாரியே என்று அறிந்த அரசன் மிக்க மகிழ்ச்சியடைந்தான்.
கருத்துகள்
கருத்துரையிடுக